பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Published on

சென்னை,

11, 12-ம் வகுப்புத் துணைத் தேர்வு விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய மற்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம், பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 18-ந் தேதி (நாளை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-2 அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் அதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இந்த விண்ணப்ப படிவத்தினை, பூர்த்தி செய்து 19-ந் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-, மறுகூட்டல் உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-, ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/- என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com