தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயில்கள் திருட்டு

தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு திடீரென தடைபட்டதால், வானொலி நிலைய உதவி பொறியாளர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயில்கள் திருட்டு
Published on

தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு திடீரென தடைபட்டதால், வானொலி நிலைய உதவி பொறியாளர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வானொலி நிலையம் சிறிது தொலைவில் உள்ள கோபுரம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை அருகில் உள்ள கோபுரம் மற்றும் அதன் அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 100 கிலோ எடை கொண்ட 6 காப்பர் காயில்கள் திருடு போயிருந்தனவாம். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com