

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியின் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கும், உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த வகுப்பு ஆசிரியர் சென்று பாடம் நடத்திய வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.