காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வு

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வு
Published on

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் சென்னையை அடுத்த காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருபவர்களால் இந்த எண்ணிக்கை உயருகிறது என உள்ளூர்வாசிகள் கூறினர்.

இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,245 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 8,674 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை மொத்தம் 169 பேர் உயிரிழந்து உள்ளனர். 5,695 பேர் குணமடைந்து உள்ளனர். 2688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com