தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்துள்ளது: சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்துள்ளது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்துள்ளது: சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Published on

சென்னை,

கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் சற்றுக் குறைந்திருக்கிறது.

அடுத்த சில நாள்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது. பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்வதை குறைத்துக் கொள்வது, மேலும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும். முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். தேவையின்றி, பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்த்துவிட வேண்டும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com