கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன

கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்று 3-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு வரை நடைபெற்ற இந்த முகாமில், சுகாதாரத்துறை ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கமான பணி நேரத்தை விட அவர்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு சேவை செய்தனர்.

இதனால் இன்று (திங்கட்கிழமை) தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப்பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com