நடிகர் அதர்வாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில். மறைந்த நடிகர் முரளியின் மகனான நடிகர் அதர்வாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன் என்று அதர்வா பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com