திரு.வி.க. நகரில் பள்ளி, அம்மா உணவகம், ரேஷன் கடைகளில் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் ஆய்வு

2 நியாய விலை கடைகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஜி.எஸ். சமீரன் ஆய்வு செய்தார்.
திரு.வி.க. நகரில் பள்ளி, அம்மா உணவகம், ரேஷன் கடைகளில் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் ஆய்வு
மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன்
Published on: 

சென்னை,

திரு.வி.க.நகர் மண்டலத்தில் சென்னை நடுநிலைப்பள்ளி, அம்மா உணவகம் மற்றும் நியாய விலை கடைகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;-

ஆய்வு

இன்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-70, கபிலர் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியின் செயல்பாடுகள், சமையலறை, பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அம்மா உணவகம்

பின்னர், ராஜா தெருவில் உள்ள அம்மா உணவகத்தினை பார்வையிட்டு, சமையலறை, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு செய்து, மக்களுக்கு தரமான உணவினை வழங்கிட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

நியாய விலை கடைகள்

தொடர்ச்சியாக, அப்பகுதியில் உள்ள 2 நியாய விலை கடைகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X