கவுன்சிலரின் மகள் தீக்குளித்து தற்கொலை

குருந்தன்கோடு அருகே கவுன்சிலரின் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கவுன்சிலரின் மகள் தீக்குளித்து தற்கொலை
Published on

திங்கள்சந்தை, 

குருந்தன்கோடு அருகே உள்ள பட்டன்விளையை சேர்ந்தவர் சசிகுமார் (வயது49). மரவேலை செய்து வருகிறார். இவருடய மனைவி சிவந்திகனி. இவர் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகள் சஜித்ரா (19). இவர் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்தார். அத்துடன் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று சஜித்ரா வீட்டு அறையில் தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஜித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com