கவுன்சிலர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுன்சிலர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
Published on

திங்கள்சந்தை, 

நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

நெய்யூர் பேரூராட்சியில் அதிகாரிகள் வளர்ச்சி பணிகளை ஒதுக்கீடு செய்யவில்லை என சில கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து அதிகாரிகளை கண்டித்து கடந்த 17-ந் ததி மாலையில் 8 கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.

இந்த போராட்டத்தில் 6-வது வார்டு கவுன்சிலர் புஷ்பதிரேஸ், 7-வது வார்டு எழில் டைசன், 10-வது வார்டு ததேயு ராஜா, 13-வது வார்டு விஸ்வாசம், 3-வது வார்டு மேரி லில்லி புஷ்பம், 4-வது வார்டு ராஜாகலா, 12-வது வார்டு கவிதா, 9-வது வார்டு ஷீலா என 8 பர் ஈடுபட்டனர். அவர்களிடம் இரணியல் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் கவுன்சிலர்கள் இரவு, பகல் என்று பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

கஞ்சி காய்ச்சினர்

போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் நேற்று பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கஞ்சி காய்ச்சி குடித்தனர்.

இதுகுறித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கவுன்சிலர்கள் கூறும்போது, ''நெய்யூர் பேரூராட்சியில் ஒரு சில வார்டுகளில் இதுவரை எந்த பணியும் ஒதுக்கீடு செய்யவில் லை. எனவே குறிப்பிட்ட அந்த வார்டுகளில் பணி ஒதுக்க வேண்டும். இது குறித்து பேரூராட்சி உதவி இயக்குனர் நேரில் வந்து உறுதியளிக்கும்வரை போராட்டத்தை தொடர்வோம்'' என்ற னர். கவுன்சிலர்கள் கஞ்சிகாய்ச்சி குடித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com