தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நில பிரச்சினை காரணமாக கணவன், மனைவியை கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த புலமாடன் மகன் வண்ணமுத்து (வயது 65) மற்றும் அவரது மனைவி உலகம்மாள் ஆகிய இருவரையும் அவர்களது வீட்டருகே வைத்து கடந்த 12.5.2018 அன்று நில பிரச்சினை காரணமாக புதுக்குடி உலகம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்லதுரை பாண்டியன் மகன் மாயாண்டி(எ) ரவி(62) மற்றும் அவரது மனைவி, அவரது மகன் ஜோதி மணிகண்டன்(28) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தவறாக பேசி கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டி(எ) ரவி, அவரது மனைவி மற்றும் ஜோதி மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று (18.6.2025) குற்றவாளிகளான மாயாண்டி(எ) ரவிக்கு ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும், ஜோதி மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதமும், மாயாண்டி(எ) ரவியின் மனைவியை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சந்திரா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com