அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

புழல் சிறையில் இருந்து கானொலி வாயிலாக செந்தில் பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
Published on

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு இதுவரை 15 முறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து கானொலி வாயிலாக செந்தில் பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 16-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com