அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிப்பு
Published on

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 7-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com