

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 6-ந் தேதி நடை பெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சத் தியபாமாவும், நாம் தமிழர்கட்சி சார்பில் கார்த்திகா வும் உள்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட் சைகள் என 22 பேர் போட்டியிட்டனர். வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற்கொண்டார்.இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், மாநில மகளிர் அணி செய லாளருமான கார்த்திகா, தேர்தலின்போது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து, முதல்-அமைச்சர் ரோடு ஷோ சென்ற பாதையில் மறியலில் ஈடுபட்டார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற பாதையில் அனுமதி அளிக்கப்ப டாத இடத்தில் இடையூறாக வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி பதாகையை அகற்றிய போது போலீசாரை அவதூறாக பேசி தாக்க முயன்றதாகவும், காமரா ஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் குழந் தையுடன் வீட்டுக்கு சென்ற த.வெ.க. தொண்டர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவதூறு வீடியோ பதிவிட்டது உள்ளிட்ட 4 வழக்குகளில் 12-க்கும் மேற்பட்ட பிரி வுகளில் கார்த்திகா உள்பட 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கார்த்திகா உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திகா உள்பட 9 பேரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்க கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கார்த்திகா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட் கார்த்திகா உள்பட 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.