பள்ளத்தில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு


பள்ளத்தில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு
x

தூத்துக்குடியில் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருடைய சினைப் பசு மாடு தவறி விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் பகுதியில் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் கோரம்பள்ளம், சீனி நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது சினைப் பசு மாடு தவறி விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு ஊர் மக்கள் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக தீயணைப்பு-மீட்புப் பணி நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பசு மாட்டினை கயிறுகள் கட்டி பாதுகாப்பாக மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். எந்தவித காயமுமின்றி சினைப் பசுமாட்டினை துரிதமாக மீட்ட சிப்காட் தீயணைப்பு வீரர்களை மாட்டின் உரிமையாளரும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

1 More update

Next Story