

நெல்லை,
திருநெல்வேலி மாவட்டம் டவுண் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில், மாடுகளில் கேட்பாரற்ற நிலையில் சுற்றித் திரிகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.
இது தொடர்பாக பலரும் மாநகராட்சி மற்றும் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை போலீசார் பிடித்துச் சென்றனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்துள்ளனர்.