

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அமலாக்கத்துறை மற்றும் காவலர்கள் மீது சி.பி.எம். கட்சியினர் வெறியாட்டம்; கம்யூனிஸ்டுகளின் இந்த வன்முறையை வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் அரசுக்கு கண்டனம்!
முன்னாள் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடர்பான அமலாக்கத்துறை (ED) சோதனையை தொடர்ந்து, கடமையை செய்ய சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது சி.பி.எம். கட்சியினர் நடத்தியுள்ள வெறித்தனமான வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினரின் வன்முறையில் இருந்து சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈவு இரக்கமின்றி ஈடுபட்டு வரும் நிலையில்,ஊழல்வாதிகளையும், அதிகாரிகளை தாக்கும் வன்முறையாளர்களையும் காப்பாற்றும் நோக்கில் செயல்படும் காங்கிரஸ் அரசின் சாயம் தற்போது வெளுத்துள்ளது.
எனவே, இனியாவது சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வெறியாட்டத்தில் ஈடுபட்ட குண்டர்கள் மீது காங்கிரஸ் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.