

கொடைக்கானல்,
சோலை குருவி இயற்கை ஆர்வலர்கள் குப்பைகள் மூலம் மலபார் அணிலை வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
கொடைக்கானல் சிட்டி வியூ வனப்பகுதியில் இன்று சோலை குருவி தனியார் இயற்கை ஆர்வலர்கள் சுமார் ஒரு டன் குப்பைகளை சேகரித்தனர். குப்பைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சேகரித்த குப்பைகளை வைத்து பெரிய அளவிலான மலபார் மர அணிலை வடிவமைத்தனர்.
இந்த வடிவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை கண்ட இடங்களில் வீசக் கூடாது என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.