முன்விரோதத்தில் வாலிபருக்கு வெட்டு

தஞ்சை அருகே கோவில் விழாவில் முன்விரோதத்தில் வாலிபரை வெட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதத்தில் வாலிபருக்கு வெட்டு
Published on

தஞ்சை அருகே மறியல் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் அஜித் குமார் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள முனியாண்டவர் கோவிலில் நடந்த அன்னதான நிகழ்ச்சியின் போது மீண்டும் அஜித்குமாருக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டுக்கு சென்று பெரிய கத்தியை எடுத்து வந்து அஜித்குமாரை வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த அஜித்குமார் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஜித்குமார் அளித்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com