சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு

சி.வி.சண்முகம் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்.
சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வெடித்து சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியும் என்று அ.தி.மு.க. 2-ஆக பிரிந்தது.

பின்னர், மீண்டும் அ.தி.மு.க. ஒன்றிணைந்த நிலையில், சி.வி.சண்முகம் மட்டும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளார். இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த 9-ம் தேதி நடந்த விழுப்புரம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கார் மீது கல்வீச்சு, மறியல் போராட்டம் நடந்தது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சி பொறுப்பிலுருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com