முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்
Published on

சென்னை,

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர்30-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

அப்போது உள்ளாட்சி தேர்தல் பணிகள் முடியும் வரை நேரில் ஆஜராக முடியாது என எம்.ஆர் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com