தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

சரிசெய்யப்பட்டது

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் பண்ணையூர் பாலத்திற்கும் ராஜாக்கமங்கலம் துறைக்கும் இடைப்பட்ட இடத்தில் சாலையின் நடுவே கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து பள்ளத்தை மூடினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தொவித்தனர்.

குப்பைகளை அகற்ற வேண்டும்

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை முகம்மது கார்டன் செல்லும் வழியில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளதால், அந்தபகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக் மைதீன், திட்டுவிளை.

அபாய பள்ளம்

திருவட்டாரில் இருந்து மாத்தார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் திருவட்டார் கிராம அலுவலகத்துக்கு செல்லும் வழியில், சாலயின் ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் அதில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாகள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சங்கர நாராயணன், திருவட்டார்.

சாலையை சீரமைக்கப்படுமா?

நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் காரவிளை மற்றும் எறும்புகாடு பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.

சாலை பணி முடக்கம்

நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட பேயன்குழி பகுதி உள்ளது. இந்த பகுதியில் அம்மன் மண்டபத்தின் வலது புறமுள்ள சாலையை சீரமைக்க பணி நடைபெற்றது. ஆனால் தற்போது பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபின், பேயன்குழி.

ஆபத்தான நீர்தேக்க தொட்டி

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வைராவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக நீர்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டது. ஆனால் புதிய குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் பழைய குடிநீர் தொட்டி இன்னும் அகற்றப்படவில்லை. அந்த குடிநீர் தொட்டியானது மிகுந்த சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய நீர்தேக்க தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.தியாகு, வைராவிளை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com