தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

சேதமடைந்த மின்கம்பம்

குருந்தன்கோடு பஞ்சாயத்துக்குட்பட்ட தெற்கு ஆலன்விளை பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் மேலும் 2 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காட்சன், குளச்சல்.

பஸ்சை இயக்க வேண்டும்

மார்த்தாண்டம் முதல் பேச்சிப்பாறை மற்றும் மார்த்தாண்டம் முதல் ஆலஞ்சோலைக்கு தடம் எண் 86 பஸ் மகளிருக்கு இலவசமாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் கடந்த 10 நாட்களாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மலையோர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே நிறுத்திய பஸ்சை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுஜின், கடையல்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட துண்டத்துவிளை பகுதியில் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் ஓடை செல்கிறது. இந்த ஓடையை முறையாக தூவாரப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூசை மிக்கேல், கருங்கல்.

சீரமைக்க வேண்டும்

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை உள்ளது. இந்த பாலூட்டும் அறை மிகவும் சிதலமடைந்து, யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலூட்டும் அறையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தே.ஜாண் ஜெய் சிங், காஞ்சிரகோடு.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

தோவாளை தாலுகாவுக்குட்பட்ட பூதப்பாண்டி செட்டித்தோப்பு அணைக்கட்டு அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் கொடி படர்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி.

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் புனித சவேரியார் ஆலயம் ஜங்சனில் இருந்து செட்டிக்குளம் செல்லும் சாலையில் கட்டண கழிவறை மற்றும் குளியலறை உள்ளது. ஆனால் இவைகளை முறையாக சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் வழிப்பாதையில் கழிவுநீர் பாய்கிறது.. எனவே சம்மபந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.தர்மராஜன், அனந்தபத்மநாபபுரம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட சேனம்விளை பகுதியில் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், சேனம்விளை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com