தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

புதர்கள் அகற்றப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புன்னைநகர் வீட்டு வசதி காலனியில் குடியிருப்புகளின் எதிரே அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தொவித்தனர்.

சேதமடைந்த அங்கன்வாடி

அம்மாண்டிவிளை அடுத்த மாவிளை பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இங்கு படிக்கும் குழந்தைகள் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் படித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயன், மாவிளை.

சீரமைக்க வேண்டிய சாலை

கீழ்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்சியில் இருந்து விழுந்தயம்பலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். மேலும் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிபிலா கிராப், அரசகுளம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் அனந்தன் பாலம் பகுதியில் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே ஷட்டர் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி தண்ணீர் சீராக செல்ல வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேவியர் ஜார்ஜ், சைமன்நகர்.

வீணாகும் தண்ணீர்

தோவாளை தாலுகாவுக்குட்பட்ட திட்டுவிளை மெயின் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் கீழே பதிக்கப்பட்டுள்ள குடிநீர்குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

சுகாதார சீர்கேடு

திருவிதாங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கேரளபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, கேரளபுரம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com