தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

வாகன ஓட்டிகள் அவதி

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை பெரிய தெரு சாலை உள்ளது. இந்த சாலை கடந்த மழை காலத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக் மைதீன், திட்டுவிளை.

விபத்து அபாயம்

கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட சூரப்பள்ளம் கிராமம் ஆற்றாங்கரை சாலையில் மின் இணைப்பு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியின் கதவுகள் மற்றும் அதன் உள்ளே உள்ள மின் கருவிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் பெட்டிக்குள் வடிந்து மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மின் இணைப்பு பெட்டியின் சேதமடைந்த கதவுகள் மற்றும் மின் கருவிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கதிரேசன், கன்னியாகுமரி.

இருக்கை வசதி தேவை

திருவட்டார் வட்டாரத்துக்குட்பட்ட வேர்க்கிளம்பி துணை பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் மக்களுக்கு இந்த அலுவலகத்தில் அமர்வதற்கு இருக்கை வசதி செய்யப்படாமல் உள்ளது. இதனால், மக்கள் பல மணிநேரம் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெபின், மணலிக்கரை.

புதிய கட்டிடம் அமைக்கப்படுமா?

கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி ஊராட்சிக்குட்பட்ட கொல்லாகுளம் தேரிவிளை பகுதியில் படிப்பகம் அமைந்திருந்தது. தற்போது படிப்பகம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு படிப்பகத்திற்கு புதிய கட்டிடம் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷிபு, அடைக்காகுழி.

சேதமடைந்த சாலை

நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட பாட்டாவிளை ஊரில் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது சபீர், குளச்சல்.

நடவடிக்கை தேவை

குழித்துறை சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டது. பணிகள் முடிந்து பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை முறையாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு காண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஐசக் கிங்ஸ்லின், குழித்துறை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com