வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2-வது அலகில் தொழில்நுட்பக் கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com