“2006-2011 வரை தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்றது” - குமரியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம்

தமிழகத்தில் 2006 -2011 வரை இருண்ட ஆட்சி நடைபெற்றதாக குமரியில் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“2006-2011 வரை தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்றது” - குமரியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம்
Published on

கன்னியாகுமரி,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கன்னியாகுமரி செட்டிக்குளம் பகுதியில் இன்று பிரச்சாரம் செய்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் 2006 -2011 வரை இருண்ட ஆட்சி நடைபெற்றதாக கூறினார். தொடர்ந்து அவர் பேசிய போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது. சரக்கு பெட்டக துறைமுகம் தொடர்பான திமுகவின் பொய்யான பிரச்சாரத்தை நம்பாதீர்கள். மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற திமுக நாடகமாடுகிறது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com