பூட்டிய வீட்டுக்குள் முதியவர் பிணம்

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் முதியவர் பிணமாக கிடந்தார்.
பூட்டிய வீட்டுக்குள் முதியவர் பிணம்
Published on

தூத்துக்குடி நந்தகோபால்புரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). சமையல் தொழிலாளியான இவர், கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தூத்துக்குடியில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் செல்வதாக அவரது தங்கையிடம் கூறி சென்றாராம்.

இந்தநிலையில் அவரது வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த வடபாகம் போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, கனகராஜ் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com