குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

வேடசந்தூர் அருகே குளத்தில் கழிவுநீர் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தது.
குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
Published on

வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு நால்ரோடு காலனி அருகே கெங்கன்குளம் உள்ளது. இந்த குளத்தில் அந்த பகுதியில் உள்ள ஆலையில் இருந்து கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குளத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் விடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மீன்குஞ்சுகள்  செத்து மிதந்தன. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்தகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com