மாரண்டஅள்ளி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

மாரண்டஅள்ளி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு
Published on

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அடுத்த கெண்டேயன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் வாழை தோட்டத்திற்கு விவசாய பணிக்காக சென்றார். அப்போது தோட்டத்தில் இருந்த பாம்பு அவரை கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com