கிருஷ்ணகிரியில்அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரியில்அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்போலீசார் விசாரணை
Published on

கிருஷ்ணகிரி லைன்கொல்லை பகுதியில் உள்ள சாலையோரத்தில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக கொத்தபேட்டா கிராம நிர்வாக அலுவலர் முகமது சுப்ரானுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com