இண்டூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து புரோக்கர் சாவு

இண்டூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து புரோக்கர் சாவு

Published on

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள நத்தஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் கண்ணன் (வயது 37). தர்மபுரி பஸ் நிலையத்தில் புரோக்கராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணணுக்கு நத்தஅள்ளி ஆத்துக்கொட்டாய் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக தனது மனைவியிடம் சொல்லி விட்டு சென்றார்.

பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து உறவினர்கள் கிணற்றுக்கு அருகே வந்து பார்த்தபோது கண்ணன் கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. கிணற்றில் மிதந்த கண்ணனின் உடலை உறவினர்கள் மீட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற இண்டூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com