காரிமங்கலம் அருகேவிபத்தில் கூலித்தொழிலாளி பலி

காரிமங்கலம் அருகேவிபத்தில் கூலித்தொழிலாளி பலி
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் மொபட்டில் நேற்று மாலை அனுமந்தபுரத்தில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரிமங்கலம் அருகே செலமாரம்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மொபட் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார். காரிமங்கலம் போலீசார் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com