குருபரப்பள்ளியில்சரக்கு வேன் மோதி ஐ.டி. நிறுவன ஊழியர் பலி

குருபரப்பள்ளியில்சரக்கு வேன் மோதி ஐ.டி. நிறுவன ஊழியர் பலி
Published on

குருபரப்பள்ளி:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 36). பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளிக்கு வந்தார். அங்கு கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் சுந்தரமூர்த்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com