ஊத்தங்கரை அருகே சைக்கிள் மீது கார் மோதி ஓய்வு பெற்ற சர்வேயர் பலி

ஊத்தங்கரை அருகே சைக்கிள் மீது கார் மோதி ஓய்வு பெற்ற சர்வேயர் பலி
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரையை அடுத்த கெங்கபிராம்பட்டியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60). ஓய்வு பெற்ற சர்வேயர். இவர் நேற்று முன்தினம் இரவு கெங்கபிராம்பட்டியில் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி கொண்டு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள முருகன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சம்பத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லும் வழியில் சம்பத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com