கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி
Published on

கிருஷ்ணகிரி ஆலப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி. கடந்த 5-ந் தேதி இரவு இவர் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் முனியப்பன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் சதீஷ்குமார் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com