பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

பள்ளி மாணவன்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவருக்கு கவியரசன் (வயது 10), பிரசன்னா ஸ்ரீ (7) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் கவியரசன் மாக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் கவியரசன் சென்றான். கவியரசனுக்கு நீச்சல் தெரியாது என தெரிகிறது. அப்போது கிணற்றில் குளித்து கொண்டிருந்தவன் திடீரென தண்ணீரில்மூழ்கினான்.

சோகம்

இதனை பார்த்த மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டவாறு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி இறந்த நிலயில் கவியரசனின் உடலை மீட்டனர். பின்னர் பாப்பாரப்பட்டி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com