தமிழர் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா : அண்ணாமலை வாழ்த்து

மாமன்னர் ராஜராஜ சோழனின் கட்டிடக்கலை அறிவாற்றலுக்கும், கலைத்திறனுக்கும் வரலாற்றுச் சான்றாகும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராஜராஜ சோழன் சதய விழா
Published on: 

சென்னை,

தமிழரின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழாவிற்கு ‘வீ த லீடர்ஸ்’ கட்சியின் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து

மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் 1041 ஆவது சதய விழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், எனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில், வீரத்திற்கும், ஆட்சித் திறனுக்கும் பெயர்பெற்ற மாமன்னர் ராஜராஜ சோழனின் கட்டிடக்கலை அறிவாற்றலுக்கும், கலைத்திறனுக்கும் வரலாற்றுச் சான்றாகும். தமிழர் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com