மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி சாவு

சிதம்பரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி சாவு
Published on

சிதம்பரம்,

சிதம்பரம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவகல்லூரி ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com