வி.எஸ். பாபு மறைவு: சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் என்ன?

வி.எஸ்.பாபு மறைவுக்குப் பிறகு சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 108 ஆக குறைந்ததுவிட்டது.
சட்டசபை
சட்டசபை
Published on: 

சென்னை,

கடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை தவெக அமைத்துள்ளது. இதற்கிடையே, 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்த அ.தி.மு.க. உட்கட்சி பூசலினால் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் (பெருந்துறை), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) , இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் 6 பேரும் த.வெ.க. கட்சியில் இணைந்துவிட்டனர்.

இந்த நிலையில், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிவிட்டனர். ஆனால் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்று, ராஜினாமா செய்திருந்த திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு இருப்பதால் அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளில் 5 இடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில்கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் மறைவினால் காலியான தொகுதியின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 228 ஆக குறைந்துள்ளது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ மறைவை அடுத்து, சட்டசபையில் கட்சிகளின் பலத்தை பார்த்தால், த.வெ.க. – 108, தி.மு.க. – 59, அ.தி.மு.க. – 41, காங்கிரஸ் – 5, பா.ம.க. – 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 2, தே.மு.தி.க. – 1, பா.ஜனதா -1, அ.ம.மு.க. – 1 என 228 இடங்கள் உள்ளன.

X