வியாபாரிக்கு கொலைமிரட்டல்

உடன்குடியில் வியாபாரிக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வியாபாரிக்கு கொலைமிரட்டல்
Published on

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள பிறைகுடியிருப்பை சேர்ந்த திருப்பாப்பு மகன் சுபாஷ்ராஜன் (வயது 36). வியாபாரி. இவர் உடன்குடி மேலபஜாரில் இரு சக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது கடையில் உடன்குடி தேரியூரை சேர்ந்த ராஜகுமார் மகன் நாகராஜன் (25) என்பவர் மோட்டார் சக்கிள் வாங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வந்த நாகராஜன் மோட்டார் சைக்கிள் அடிக்கடி பழுதாவதாக கூறியுள்ளார். இதற்கு முறையாக சர்வீசுக்கு கொண்டு வராததால் மோட்டார் சைக்கிளில் பிரச்சினை இருக்கலாம் என சுபாஷ்ராஜன் கூறினாராம். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியபோது, தான் மறைத்து வைத்திருந்த வாளை காண்பித்து சுபாஷ்ராஜனுக்கு நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன் பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து நாகராஜனன தேடி வருகிறார்

X

Daily Thanthi
www.dailythanthi.com