கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52- ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52- ஆக உயர்வு
Published on

 கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர்.

நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று   52 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com