கடன் பிரச்சினை: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

கடனை திருப்பி செலுத்த முடியாததால் வாலிபர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (36 வயது) தொழிலாளி. இவர் அத்தியாவசிய தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் பாலமுருகனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com