தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்த மான்...!

திருவண்ணாமலையில் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் புகுந்த மானை வனத்துறையினர் மீட்டனர்.
தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்த மான்...!
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன.

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலையில் கடுமையான வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் போதிய தண்ணீர், உணவு கிடைக்காமல் தவித்து வரும் சில மான்கள் அவ்வபோது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து குடியிருப்புப் பகுதியில் புகுந்து விடுகின்றன.

இந்தநிலையில் திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியில் உள்ள புதுவாணியங்குளம் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று காலை உணவு மற்றும் தண்ணீர் தேடி மான் ஒன்று புகுந்தது. அப்போது சுவற்றில் மோதி மானுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடியிருப்பு பகுதியில் புகுந்த மானை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com