தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைந்த மான்; நாய்கள் கடித்து குதறியதில் படுகாயம்!

வேலூர் மாவட்டத்தில் கிராமத்திற்குள் நுழைந்த மானை நாய்கள் துரத்திகடித்ததில் படுகாயம் அடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கூட்ரோடு பகுதியில் இன்று காலை தண்ணீர்தேடி வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று கிராம பகுதிக்குள் நுழைந்து உள்ளது.அப்போது மானைபார்த்த நாய்கள் அதனை துரத்தி சென்று கடித்து குதறியுள்ளது.

இதனைகண்ட அப்பகுதிமக்கள் நாய்களை விரட்டிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனத்துறையினர் படுகாயமடைந்த மானை மீட்டனர்.

தொடர்ந்து, மீட்கப்பட்ட மானை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் உத்தரவின் பேரில் மானை அருகே உள்ள பருவமலை காப்பு காட்டில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com