டெல்லி போராட்டம்; மத்திய அரசின் ஜனநாயக மீறல்: திரவுபதி முர்மு தலையிட வேல்முருகன் வலியுறுத்தல்

அரசியலமைப்பின் மாண்பு மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவை கடுமையான பாதிப்பை சந்திக்கும் அபாயம் உருவாகும் என்று வேல்முருகன் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
Published on

சென்னை,

"டெல்லி போராட்டத்தில் மத்திய அரசின் ஜனநாயக மீறல்; திரவுபதி முர்மு தலையிட வேல்முருகன் வலியுறுத்தல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் எதிரிகளா?

சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதலா?

இதுதான் ஜனநாயக ஆட்சியா?

கோரிக்கை

மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாநில உரிமைகளை வலியுறுத்தும் மக்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும், தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இந்திய பெருநிலம் முழுமைக்கும் போராடி வருகின்றனர்.

அச்சுறுத்தும் நடவடிக்கை

அவர்களின் குரலை கேட்டு தீர்வு காண வேண்டிய மத்திய அரசு, அதிகாரத்தின் பலத்தை மட்டுமே நம்பி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. போராடும் மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு, தடுப்புகள், துப்பாக்கிச்சூடு, எல்லைகளை மூடுவது, இணையங்களை முடக்குவது, போக்குவரத்தை முடக்குவது என்று, காவல்துறை மற்றும் துணை ராணுவத்தின் மூலம் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

கடுமையான நடவடிக்கை

சில இடங்களில் ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் நபர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சி நிர்வாகத்தில் உள்ள பாஜக, பாசிச தன்மையையே இதன் மூலம் வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சுயாதீனமான, வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சட்டத்தை மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சர்வாதிகார ஆட்சி

சொந்த நாட்டு மக்களை எதிரிகளை போல நடத்தி, அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பலவந்தமாக ஒடுக்க நினைக்கும் அரசு, மக்கள் அரசாக இருக்க முடியாது. அது நிறுவனங்களின் நலன்களுக்காக செயல்படும் கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சியாக மட்டுமே வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

மக்கள் விரோதம்

நேற்று டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையும், இன்று டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கப் பாதுகாப்பு படைகளை குவித்திருப்பதும், எல்லைகளை மூடி இருப்பதும், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்களின் ஜனநாயக போராட்டங்கள் அடக்கப்படுவதும், இந்த மத்திய அரசின் மக்கள் விரோத அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.

தார்மீக உரிமை

மக்களின் நம்பிக்கையை இழந்த எந்த அரசும், ஜனநாயகத்தின் பெயரில் தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்கு தார்மீக உரிமை பெற்றதாக கூற முடியாது. இத்தகைய போக்கு தொடர்ந்தால் இந்தியாவின் ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், அரசியலமைப்பின் மாண்பு மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவை கடுமையான பாதிப்பை சந்திக்கும் அபாயம் உருவாகும்.

அசாதாரண சூழ்நிலை

இந்திய'ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டில் உருவாகியுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அவசரமாக பரிசீலித்து, மக்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ந்து மீறும் இந்த மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com