

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய்யுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அவரைப் பார்க்க வேண்டும். அருகில் நின்று பேச வேண்டும், அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அப்படியிருக்க, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற 22 ஆண்டுகால ஆசை கொண்ட ஒரு பெண்ணின் கனவை நனவாக்கி இருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்.
டெல்லியில் நேற்று நடை பெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். அப்போது சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி, ஒரு பெண்ணை முதல்-அமைச்சர் விஜய்யிடம் அழைத்து வந்தார்.
அந்தப் பெண்ணை அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி, "இவர் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடைய வீட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கு உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை” என்று தெரிவித் தார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியுடன் அந்தப் பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதல்- அமைச்சர் விஜய் அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவரிடம் எப்படி இருக்கிறீர்கள் என்றும் அன்புடன் நலம் விசாரித்தார்.
22 ஆண்டுகளாக மனதில் வைத்திருந்த நீண்ட நாள் ஆசை, சில நொடிகளில் நிறைவேறிய மகிழ்ச்சியில் அந்தப் பெண்ணின் முசுத்தில் அத்தனை சந்தோஷம், முதல்-அமைச்சர் விஜய்க்கு நெகிழ்ச்சியுடன் அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் என்.ஆனந்தும் உடனிருந்தார்.
பெரிய பெரிய பிரபலங்கள், அரசியல் தலை வர்கள் எனப் பலரும் பங்கேற்ற ஒரு முக்கியமான விழாவில், 22 ஆண்டு களாகத் தன்னிடம் பணி யாற்றும் பெண்ணின் சிறிய ஆசையைப் பிரியங்கா காந்தி கவனத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியதும், அதற்கு விஜய் மகிழ்ச்சியுடன் ஒத்துழைத்ததும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு புகைப்படம் என்பது சிலருக்கு வெறும் நினைவுப் பதிவு. ஆனால், சிலருக்கு அது பல ஆண்டுகளாக மனதில் சுமந்த கனவின் நனவாக்கம், அப்படியொரு மறக்க முடியாத நினைவாக அந்தப் பெண்ணுக்கு அமைந்து இருக்கிறது விஜய்யுடனான இந்தப் புகைப்படம், இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.