தொகுதி மறுவரையறை விவகாரம்: எம்.பி.க்கள் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் வருகிற 8-ந்தேதி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
முதல்-அமைச்சர் விஜய்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிக்க வருகிற 8-ந்தேதி தமிழக எம்பிக்களின் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய உத்தேசித்துள்ள நிலையில், எம்பிக்கள் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

மத்திய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் புதுடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com