கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.
கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர் கோரிக்கைகளுக்கான அறிவிப்புகள் ஏதுமில்லை. முதல்-அமைச்சர் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய அளவில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று காலை கடலூர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com