கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, சேரன்மாதேவியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட பொருளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் முத்து செல்வன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டப்படிப்பு ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டார தலைவர்கள் மணிகண்டன், சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமார், துணை செயலாளர் பொன் பாண்டியன், அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com